ஊரடங்கு வேளை இராணுவம், காவல்த்துறையினர் முன்பாக வாள்வெட்டு!

You are currently viewing ஊரடங்கு வேளை இராணுவம், காவல்த்துறையினர் முன்பாக வாள்வெட்டு!

மருதனார்மடம் சந்தியில், நேற்று இரவு 7 மணியளவில் ஊரடங்கு வேளையில், இராணுவம், காவல்த்துறையினர் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து காவல்த்துறையினர், விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே, இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவரது, கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே, தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில், அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால், மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments