ஊரடங்கை தளர்த்த மக்கள் போராட்டம் ; அதிபருடன் மல்லுக்கட்டும் ஆளுநர்!

ஊரடங்கை தளர்த்த மக்கள் போராட்டம் ; அதிபருடன்  மல்லுக்கட்டும் ஆளுநர்!

அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு சற்றும் குறையாத நிலையில், பல்வேறு மாகாணங்களில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

”Trump ஒன்றும் அமெரிக்காவின் அரசரல்ல என்று கூறிய ஆளுநர் ‘Andrew Cuomo’, நியூயார்க் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்”

எல்லா வகையிலும் உலகின் முதன்மை நாடாக வலம் வந்து கொண்டிருந்த அமெரிக்கா கொரோனா பாதிப்பிலும் தன் இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. உலக அளவில் அதிக அளவாக அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி, 38 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கு நிலையை மூன்று கட்டங்களாக தளர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் Trump. டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வந்தது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளை எல்லாம் விஞ்சிய மாகாணமான நியூயார்க்கின் ஆளுநர் “Andrew Cuomo” டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டிரம்ப் ஒன்றும் அமெரிக்காவின் அரசரல்ல என்று கூறிய அவர் நியூயார்க் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்தார்.

ஆளுநர்களுக்கும் அதிபருக்கும் இடையேயான மோதல் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி பொதுமக்களே போராட்டத்தில் இறங்கினர். ஐடாஹோ (Idaho) மாகாணத்தின் ஆளுநர் பிராட் லிட்டில் (Brad Little) ஊரடங்கை ஏப்ரல் இறுதி வரை நீடித்து அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொது மக்கள், கண்முன்னே கொத்துக்கொத்தாக நிகழும் மரணங்களைக் கண்ட பின்னும், கொரோனா வைரஸ் என்பது வெறும் புரளி என்றும், பாதுகாப்பு என்ற பெயரில் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கக்கூடாது என்றும் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி அதிர்ச்சி அளித்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments