ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறை தடியடி-பிரித்தானியா!

ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறை தடியடி-பிரித்தானியா!

பிரித்தானியாவில் அமுலில் உள்ள கொரோனா கொல்லுயிரித் தடுப்பு ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட இருக்கின்றது.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவித்தல் நாளை வியாழக்கிழமை அமைச்சர்களால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை இரவு 8:30 மணி முதல் 3 வாரங்களுக்கு அமுலாகும் வகையில் பிரித்தானிய பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பிரகாரம், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துக் கொள்வனவு, உடற்பயிற்சி, நோயாளர்கள் – வயோதிபர்களுக்கு உதவுதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட வணிக சேவைகள் – தொழில்களில் ஈடுபடுதல் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக எவரும் வெளியில் செல்ல முடியாது.

இதனை மீறுவோருக்கு தலா £30 தண்டப் பணம் அறவிடுவதற்கும், அதன் பின்னரும் முரண்டுபிடிப்போர் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை வீடுகளுக்குள் முடக்குவதற்கும் நாளை முதல் காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட இருக்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments