ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் 61 பேர் வடக்கில்!

ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் 61 பேர் வடக்கில்!

ஊவா பல்கலைக்கழகத்தினை சேர்ந்த 61 மாணவர்கள் வடக்கில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் இவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் பொது சுகாதாரபரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இரண்டு ஊர்திகளில் வடக்கினை சேர்ந்த 61 ஊவா பல்கலைக்கழக மாணவர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளார்கள்.
16 மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டதினை சேர்ந்தவர்கள் ஏனையவர்கள் வவுனியா,கிளிநொச்சி,மன்னார்,யாழ்ப்பாணம் மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் இவர்களின் விபரங்கள் பொலீஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை முன்கெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments