எகிப்தில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்; 28 பேர் பலி!

எகிப்தில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்; 28 பேர் பலி!

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்த அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை  நோக்கி 2 சுற்றுலா பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.  அவை கெய்ரோ நகரில் லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், இந்தியர் ஒருவர், 2 மலேசிய நாட்டு பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாவலர் ஒருவர் என 6 பேர் பலியாகி உள்ளனர்.  24 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் பலர் சுற்றுலாவாசிகள் ஆவர்.  பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இந்நிலையில், சில மணிநேர இடைவேளையில், எகிப்தின் வட பகுதியில் போர்ட் செட் மற்றும் டேமியேட்டா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் பலியாகி உள்ளனர்.  8 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments