எங்கள் நூலகம்!!

You are currently viewing எங்கள் நூலகம்!!

சிங்களம் மூட்டிய தீயை
எங்கனம் மறப்போம்!
ஓலைச்சுவடிகள் தொடக்கம்
பல்லாயிரம் நூல்களின்
களஞ்சியமாய் துலங்கியது
எங்கள் நூலகம்!

இனவாத உச்சத்தின் பசியில்
தமிழினத்தின் அடையாளம்
எச்சங்களின்றி
எரித்தொழிக்கப்பட்ட
இனவழிப்பின்
சாட்சியாய் நிற்கிறது
எங்கள் நூலகம்!

ஆசியாவின் தாயாய்
அனைவருக்கும் ஆசானாய்
அறிவின் சிகரமாய்
உயிரில் உறவாடியது
எங்கள் நூலகம்!

அறிவில் சிறந்தவனாய்
தமிழன் மிளிர்ந்திடக்
கூடாதென
இனவெறியின் அக்கிரமம்
அரங்கேறிய நாளின்
வடுக்களை சுமந்து
தகிக்கிறது
எங்கள் நூலகம்!

இனி
எத்தனை படிப்பகம்
பளபளப்பாய் கட்டி
வெள்ளையடிக்க முனைந்தாலும்
எந்தையர் கருவிலே
தமிழின் நிமிர்வாகி
நின்ற அறிவகத்தை
யாராலும் புதுப்பிக்க
முடியாது!

இன்றும் இதயத்தின்
ஆழத்தில் கனமான
நினைவுகளாய்
எங்கள் நூலகம்!!

✍தூயவன்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments