எஞ்சியுள்ள 34 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை!

You are currently viewing எஞ்சியுள்ள 34 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை!

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நேற்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ யாழில் சந்தித்த கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டியே பின்பற்றி வருகிறோம். அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் ,சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments