எதுவித அறிகுறியுமின்றி காலியில் மூதாட்டி பலி!

எதுவித அறிகுறியுமின்றி  காலியில் மூதாட்டி பலி!

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் திடீரென மரணமடைந்த 72 வயது நபரது உடல் இன்று தனிமைப்படுத்தும் சட்டத்திற்கு அமைய தகனம் செய்யப்படவுள்ளது.

குறித்த நபர் மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த நபரின் மகன் அண்மையில் கொரியாவில் இருந்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். நாட்டிற்கு வந்த அவர் தனது 72 வயது தந்தையை மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார்.

இதையடுத்து குறித்த நபருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவருக்கு தொற்று இருக்கவில்லை.

எனினும் அவர் திடீரென நேற்று மரணமடைந்துள்ள தனிமைப்படுத்தும் சட்டத்திற்கு அமைய அவரின் சடலம் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments