திலீபதீபம்
தன் உயிர்த்திரியை
பசித்தீயால்
பற்றவைத்து
தீராத்தாகத்தினை
தேகத்தில் சுமந்த
புனித தியாகத்தின்
புனிதபயணம்!
இற்றைவரை
எம்மினத்தின்
இலக்கின் பாதையில்
பாதகமாய்
நிற்க்கும்
பாரதத்தின்
பார்வைக்கு
ஐந்தம்ச கோரிக்கைகளை
முன்வைத்து
இனத்தின்
இருளகற்ற
ஒற்றை விளக்காய்
தன்னுடலை
பற்றவைத்தான்
பார்த்தீபன்!
அன்றும்
அதர்மத்தின்
அதிகாரப்பிடியில்
அறத்தின் நாயகன்
அநியாயமாக
அழிக்கப்பட்டான்!
இன்றும்
நீராகரமின்றி
பன்னிருநாள்
தவமிருந்து
பாடையேறிய
பிள்ளையின்
கனவினைக்
கரைக்க முனைகிறது
காந்தி தேசம்!
என்று
தணியும்
திலீபனின்
தாகம்!
என்று
விடியும்
தமிழரின்
தேசம்!






