எம்.கே.சிவாஜிலிங்கம் கைதாகி எச்சரிக்கப்பட்டு விடுதலை!

எம்.கே.சிவாஜிலிங்கம் கைதாகி எச்சரிக்கப்பட்டு விடுதலை!

இன்று காலை வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கடந்தவாரம் அழைக்கப்பட்டிருந்த நிலையில் சமூகமளிக்காமையால் இன்று பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.

கைதான அவர் பருத்தித்துறை நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்டிருந்தார். அவரை எச்சரித்த நீதிபதி சற்று முன்னர் விடுதலை செய்துள்ளார்.

4.5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments