எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கையில் மோதல் – இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

You are currently viewing எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கையில் மோதல் – இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 29வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ – ஹொரகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு அருகில் நேற்றிரவு (20) ஏற்பட்ட மோதலில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த குறித்த இளைஞருக்கும், அங்கிருந்த ஓட்டோ சாரதியொருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூரிய ஆயுதமொன்றினால் இளைஞர் தாக்கப்பட்டதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர், வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கொழும்பு 14 ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

ஓட்டோ சாரதி தலைமறைவாகி உள்ள நிலையில், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை

இலங்கையில் பெற்றோல் நிரப்புவதற்காக 6 மணிநேரம் வரிசையில் காத்திருந்த இருவர் கடும் வெயிலில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருட்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments