எல்லைக்கிராமங்களை மேலும் மோசமாக்கும் 20ஆவது திருத்தசட்டம்-செ.கஜேந்திரன்!

எல்லைக்கிராமங்களை மேலும் மோசமாக்கும் 20ஆவது திருத்தசட்டம்-செ.கஜேந்திரன்!

எல்லைக்கிராமங்களை மேலும் மோசமாக்கும் 20ஆவது திருத்தசட்டம்-செ.கஜேந்திரன்!


நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி,கொக்குளாய் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் 07.09.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மக்களின் பூர்வீக விவசாய காணிகளை இன்றும் செய்கைபண்ணவிடாமல் அரச நிர்வாகங்கள் மற்றம் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்களக் தடுத்துவரும் நிலை தொடர்கின்றறத இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பொது அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்.
வடகிழக்க தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்தினையும் கிழக்கு மாகாணத்தினையும் இணைக்கின்ற இதயபூமியாக இருக்கக்கூடிய கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்.கருநாட்டுக்கேணி பகதியில் வாழ்கின்ற மக்களின் விவசாய காணிகள் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது அந்த மக்கள் இன்றும் விவசாயம் செய்யமுடியாமல் தடுக்கப்படுகின்றாறர்கள்.
மக்களின் பூர்விக நிலம் திட்டமிட்டவகையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்,சிங்கள இனத்தவர்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படுகின்றன.
தமிழர்கள் அவர்கள் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமல் தொடர்ச்சியாக தடுக்கப்பட்டு வருகின்றார்கள்.தாக்கப்படுகின்றார்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள்.வேண்டும் என்றே மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினராலும்,வனவளத்திணைக்களத்தினராலும் நீதிமன்றங்களுக்கு இழுக்கப்பட்டு மக்களின் தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.
போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இந்தமக்களின் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய தொடர்ச்சியாக மறுக்கப்பட்டுவரும் நிலையில்  பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது கடந்த அரசாங்கத்தில்  19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி இதனை கொண்டுவருவதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரம் ஜனாதிபதியிடம் மீண்டு நிறைவேற்று அதிகாரத்தினை கொண்டு செல்லும் விதமாக அமைந்துள்ளது
ஏற்கனவே சர்வதிகார ஆட்சி ஒரு இராணுவ ஆட்சி எந்த அரசாங்கமாக இருந்தாலும் பாராளுமன்ற அதிகாரமாக இருக்கலாம் அல்லது ஜனாதிபதி அதிகாரமாக இருந்தாலும் தமிழர்கள் ஒடுக்கப்படுவது வரலாறாக இருக்கின்றது இப்போது மீண்டு ஒரு ஒடுக்குமுறை சர்வதிகாரத்திற்குள் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் காலடிவைக்கப்படுகின்றது.
இந்த நிலமையானது ஏற்கனவே தமிழர்களின் எல்லைக்கிராமங்களில் அரச நிர்வாகங்களினால் ஒடுக்கப்படுகின்ற நிலமையினை மேலும் மோசமாக்கி விடுமோ  என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கின்றது இன்னிலையில் தமிழர்களின் இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்காக தயாகத்தின் இணைப்பிற்கும் அங்கிகாரத்திற்குமாக குரல் கொடுக்கும் நாங்கள் மக்களுடன் பக்கபலமாக நின்று  மக்களின் இருப்பினை உறுதிசெய்யவேண்டிய தேவை ஒன்று இருக்கின்றது சம்மந்தப்பட்ட எல்லாத்தரப்பும் இந்த மக்களை பலப்படுத்தி அவர்களை இந்த மண்ணில் நிதந்தரமாக நிலைபெற செய்வதற்கு முன்வரவேண்டும் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments