மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணாநிலைப்போராட்டத்தின் முதலாம் நாள் இன்றாகும்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் வட தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரமின்றி உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று (15.09.2026) செவ்வாய் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆம் திகதி வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும்.
நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், முன்னாள் போராளியும் மாவீரர் அறிவின் தந்தையுமான காக்கா அண்ணா அவர்கள் காலை 9.45 மணிக்கு ஈகைச்சுடரை ஏற்றி நிகழ்வினை தொடங்கி வைத்த பின்னர் பலரும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் தியாகதீபத்தின் நினைவுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





















