ஒஸ்லோ:
ஈரானுடனான பல மாதங்களாக நீடித்து வரும் போரில் அமெரிக்கா தனது நீண்டதூர துல்லிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை பயன்படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக “ATACMS” மற்றும் “Precision Strike Missile (PrSM)” வகை ஏவுகணைகள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் “Tomahawk” க்ரூஸ் ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பிலும் சுமார் பாதி அளவு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளுடனான சாத்தியமான மோதல்களுக்கு அமெரிக்காவின் இராணுவத் தயார்நிலை பாதிக்கப்படலாம் என்ற கவலை பாதுகாப்பு நிபுணர்களிடையே எழுந்துள்ளதென, “Reuters” குறிப்பிடுகிறது.
இருப்பினும், அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அமெரிக்க இராணுவம் இன்னும் தனது பணிகளை திறம்பட மேற்கொள்ளும் திறன் கொண்டுள்ளது என்றும், ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலை, நீண்டகாலப் போர்களில் மேம்பட்ட ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் கையிருப்பை பராமரிப்பது உலகின் மிகப்பெரிய இராணுவ சக்திகளுக்குக் கூட சவாலாக மாறிவருவதை வெளிப்படுத்துவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுவதாகவும், மேலும் “Reuters” குறிப்பிடுகிறது.
05.08.2026






