ஐக்கிய இராச்சியம்: மக்கள் தொகையில் பாதிப்பேர் பாதிக்கப்படலாம்!

You are currently viewing ஐக்கிய இராச்சியம்: மக்கள் தொகையில் பாதிப்பேர் பாதிக்கப்படலாம்!

Oxford பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய ஆராய்ச்சி அறிக்கை, இவ்வாறு கூறியுள்ளதாக Financial Times எழுதியுள்ளது.

திங்களன்று, ஐக்கிய இராச்சிய பிரதமர் Boris Johnson கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.
அவர் வீட்டிலேயே இருக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதோடு, இரண்டு பேருக்கு மேல் கூடுவதையும் தடை செய்தார். அதே நேரத்தில், அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மூடவும் உத்தரவிடடார்.

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் அறிமுகப்படுத்தியது போன்று, இந்த புதிய கடுமையான நடவடிக்கைகள் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்.

சனிக்கிழமையன்று, தொற்று ஆபத்து உடல்நிலையுள்ள 1.5 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக மூன்று மாதங்கள் வரை சுயமாக தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள