ஐரோப்பாவில் கொரோனா தொற்று – முதல் பாதிப்பு பிரான்சில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா தொற்று – முதல் பாதிப்பு  பிரான்சில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உள்ள அதிகாரிகள் இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை உருவாக்கி வருகின்ற வேளையில் பிரான்சில் நோய்த்தொற்றின் முதல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Agnés Buzyn

அந்நாட்டின் சுகாதார மந்திரி அக்னஸ் புசின்(Agnés Buzyn) கூறுகையில், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸுக்கு இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சோதனைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

ஒருவர் போர்டிகோவில்(Bordeaux) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மற்றொருவர் பாரிஸில் கண்காணிப்பில் உள்ளார் என்று புசின்(Buzyn) வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பாரிஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரும் சீனாவுக்குச் சென்றுள்ளார், ஆனால் அவர் வைரஸ் தொற்று தொடங்கிய சீன நகரமான வுஹானில் இருந்தாரா என்பது தெரியவில்லை!

குறிப்பு: பிந்திக்கிடைத்த தகவலின்படி பின்லாந்தில் கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு சீனர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று NRK தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த