ஐரோப்பாவுக்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை! ஐரோப்பிய ஒன்றியம் யோசனை!!

ஐரோப்பாவுக்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை! ஐரோப்பிய ஒன்றியம் யோசனை!!

“கொரோனா” தனிமைப்படுத்தலுக்கு பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பா சுமுகநிலைக்கு வரும் நிலையில், ஐரோப்பிய எல்லைகளும் திறக்கப்பட்டுவந்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் “கொரோனா” வைரஸ் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லையென ஐரோப்பிய ஒன்றியம் கருதுவதால் அமெரிக்கர்களுக்கான தடை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படும் அதே வேளையில், மேற்படி தடை விதிக்கப்பட்டால் அமெரிக்காவானது, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளோடு நெருக்கமான தொடர்புகளை பேணவேண்டிய நிலையேற்படுமெனவும், இது அதிபர் டிரம்ப் இன் “கொரோனா” தொடர்பான வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய சூழ்நிலையையும் கொண்டுவரலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி செய்தியை “New York Times” பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments