ஐரோப்பா வந்துசென்ற இந்திய மதகுரு மரணம்! 40.000 மக்கள் தனிமையில்!!

You are currently viewing ஐரோப்பா வந்துசென்ற இந்திய மதகுரு மரணம்! 40.000 மக்கள் தனிமையில்!!

ஐரோப்பா வந்துசென்ற இந்திய மதகுரு ஒருவர், “கொரோனா” தொடர்பில் அசட்டையீனமாக இருந்ததால் சுமார் 40.000 மக்கள் தனிமையில் இருக்கவேண்டிய சூழ்நிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

70 வயதான “Baldev Singh” என்ற மதகுருவும், அவரது இரு பணியாட்களும் சமீபத்தில் ஐரோப்பா வந்துவிட்டு, மீணடும் இந்தியா திரும்பியதாகவும், “கொரோனா” பரவல் தொடர்பான பரிந்துரைகளை அவர்கள் உதாசீனம் செய்துவிட்டு, பஞ்சாப் பகுதியில் தமது மதப்பணிகளை தொடர்ந்து செய்து வந்ததால், அவர்களோடு தொடர்பிலிருந்த 40.000 பொதுமக்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக “BBC” செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது.

ஐரோப்பா வந்துசென்ற இந்திய மதகுரு மரணம்! 40.000 மக்கள் தனிமையில்!! 1

ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட, “கொரோனா” வால் பாதிக்கப்பட்ட நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு இந்தியா திரும்பி தொடர்ச்சியாக தனது மத நடவடிக்கைகளில் தீவிரமாகவிருந்த மேற்படி மதகுரு, திடீரென உடல்நிலை மோசமானதால் மரணமடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில், மேற்படி மதகுருவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட குடும்ப அங்கத்தவர்கள் பலரும் அடங்குவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள