ஐரோப்பிய ஆலோசனை சபையின் முக்கிய அதிகாரியுடன் கலந்துரையாடிய மனிதநேய செயற்பாட்டாளர்!!

ஐரோப்பிய ஆலோசனை சபையின் முக்கிய அதிகாரியுடன் கலந்துரையாடிய மனிதநேய செயற்பாட்டாளர்!!

12 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Phalsbourg மாநகர சபையில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவுகளை மனதில் நிறுத்தி காவற்துறையின் பாதுகாப்பு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

Saverne,Strasbourg அரசியல் சந்தப்பின் தொடர்சியாக Strasbourg மாநகரசபையினை ஊடறுத்து ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் கவனயீர்ப்பு ஒன்று கூடல் நடைபெற்ற வேளையில் ஐரோப்பிய ஆலோசனை சபையின் முக்கிய அதிகாரியுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.

குறிப்பாக தமிழீழத்தில் எம்மக்கள் மீது திட்டமிட்ட முறையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் 2009 ல் கொடூரத்தனமாக இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும், தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனோடு மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய ஈருருளிப் பயண செயற்பாட்டாளர்களினாலும் பிரதிநிதிகளினாலும் கலந்துரையாடப்பட்டது. தொடர்சியாக Swiss நாட்டின் எல்லையினை நோக்கி எம் இலக்கிற்காக மனிதநேய ஈருருளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments