ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.!

You are currently viewing ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.!

கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும், தமிழீழமே தீர்வு எனவும் முக்கிய அரசியல் மையங்களில் வலியுறுத்தியபடி 7 நாடுகளை கடந்து ஐ.நா முன்றலை 1500Km பயணித்து இன்று 06/03/2022 எழுச்சிகரமாக வந்தடைந்தது.

மனித நேய ஈருருளிப்பயண போராளிகளால் ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் அண்ணாக்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நாளை 07/03/2022 பி.ப 2 மணியளவில் ஐ.நா முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் வந்து உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்றுமாறு வேண்டுகிறோம்.

« நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது »

  • தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments