ஒத்திவைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை!

ஒத்திவைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை!

நோர்வேயின் கிழக்குப்பகுதியின் “Gjerdrum / Ask” என்ற இடத்தில் 30.12.2020 அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இதுவரை மீட்கப்படாமல் இருக்கும் மூவரையும் தேடும் பணிகள், இவ்வார இறுதிவரை தற்கலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எழுவர் சடலங்களாக மீட்க்கப்பட்டிருக்கும் நிலையில், மிகுதி மூவரையும் உயிரோடு மீட்பதற்கான சாத்தியமில்லையென நேற்று காவல்துறை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேடுதல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டமை காணாமல் போன மூவரினதும் குடும்பத்தவர்களுக்கு மனவுளைச்சலை கொடுக்குமென்பதை தாம் நன்கு அறிவோமென தெரிவிக்கும் காவல்துறை, எனினும், மூவரையும் கண்டுபிடிப்பதில் துல்லியமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும், தற்போதைய காலநிலை மீட்புப்பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

பகிர்ந்துகொள்ள