ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு எமனான தண்ணீர் வாளி!

You are currently viewing ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு எமனான தண்ணீர் வாளி!

யாழ்ப்பாணம், பொன்னாலைப் பிரதேசத்தில் இன்று தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

பொன்னாலை – சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை, அருகில் இருந்த 20 லீற்றர் கொள்ளளவுடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றை எடுக்க முற்பட்டவேளை, வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.

அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments