ஒப்பாரி வைக்கும் ஓநாய் ஒன்று!!

  • Post author:
ஒப்பாரி வைக்கும் ஓநாய் ஒன்று!!

பன்னிருநாள் நீராகாரமின்றி தமிழ் இனத்திற்காக பட்டிணிப்போர் தொடுத்த தியாகதீபம் திலீபனை கொச்சைப்படுத்த முனைந்த இனப்படுகொலையாளி குணரத்தின என்ற சிங்கள இராணுவ அதிகாரியை விட தன்னுடைய கொச்சைப்படுத்தல் உச்சியை தொடவேண்டுமென நினைத்தாரோ அல்லது மகிந்தபோடும் எலும்புத்துண்டுக்கு நன்றியோடு குரைக்கவேண்டுமென நினைத்தாரோ தெரியவில்லை சிறீலங்காவின் பாராளுமன்றிலே துரோகி டக்கிளஸ் தொங்கிக்குதித்துள்ளார் என்ற செய்திதான் தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.


ஆனால் இந்த ஊடகங்களுக்கு சரியான பதில் கொடுக்க முடியாமல்போனது வேதனையாகத்தான் இருக்கின்றது.
ஓநாய் ஒன்றின் உளறலை செய்தியாக்கும் அளவிற்கு அந்த ஓநாய் சொந்த இனத்தை கொலைசெய்ததையும் கடத்தி காணாமல் ஆக்க செய்தமையும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததையும் ஒட்டுமொத்தத்தில் தமிழ் இனத்தை சூறையாடிய இந்த தாடிப்பயலை தட்டிக்கேட்பதற்கு தாயகத்திலும் புலத்திலும் தமிழ்த்தேசியம் என்ற பெயரில் இயங்கும் ஊடகங்களும் ஆய்வாளர்களும் வாயடைத்துப்போய் இருப்பதுதான் வேடிக்கையாகவுள்ளது.

காலங்காலமகா மாறிமாறி ஆளும் சிறீலங்கா பேரினவாத அரசுகளுக்கு அடிவருடி அரசியல் செய்யும் கேடி டக்கிளஸ் தேவானந்தாவுக்கு என்ன? அருகதை இருக்கு,

எங்கள் ஈழத்துக்காந்தியை தாழ்த்தியோ உயர்த்தியோ பேசுவதற்கு

உன்னால் எத்தனை எத்தனை இளைஞர்கள் யுவதிகள் கொலைசெய்யப்பட்டிருக்கின்றார்கள் உன்னால் எத்தனை எத்தனை தாய்மார்கள் கண்ணீரோடு தவிக்கின்றார்கள் உன்னால் எத்தனை ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் இத்தனையும் மறந்து இன்னும் புத்தனைப்போல் பேசிக்கொண்டிருப்பதுதான் உலக அதிசயமாக இருக்கின்றது.


டக்கிஸ் ஒன்றை புரிந்து கொள் புனிதமான வீரரை கொச்சைப்படுத்திவிட்டு வேண்டுமானால் மகிந்தாவிடம் அதிகமான எலும்புத்துண்டை வாங்கலாம் ஆனால் தமிழ்மக்களிடம் நற்பெயர் எடுக்கலாம் என கனவிலும் நினைத்து விடாதீர்!!!

மக்களே சிந்தியுங்கள்!!

இந்த ஒட்டுண்ணிக்கு அற்ப ஆசைகளுக்காக நீங்கள் ஓட்டுப்போட்டதால் அவலப்படுவது யாரென்று புரிந்து கொள்ளுங்கள் இனியாவது வேலியில் போன ஓணானைப்பிடித்து மடியில் கட்டாதீர்கள் அப்படி கட்டினால் இப்படித்தான் கடிக்கும்.

தமிழன்

பகிர்ந்துகொள்ள