ஒரு யுகத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று!

You are currently viewing ஒரு யுகத்திற்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று!

உலகத் தமிழர்களுக்கு முகத்தையும், முகவரியையும் கொடுத்த புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளாக பெயர்சூட்டிக் கொண்ட நாள் இன்று.

இற்றைக்கு சரியாக 44 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

அன்று முதல் 18.05.2009 அன்று ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெறும் வரையான முப்பத்து மூன்று ஆண்டுகாலப் பகுதியில் கெரில்லா இயக்கம் என்ற நிலையில் இருந்து தமிழீழ நடைமுறை அரசாகவும், அதனைப் பாதுகாத்த முப்படைகளைக் கொண்ட தமிழீழ தேசிய பாதுகாப்புப் படையாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பரிணமித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங்களை மௌனித்து அடுத்த வாரத்தோடு பதினொரு ஆண்டுகள் நெருங்குகின்ற பொழுதும், இன்றும் உலகத் தமிழர்களை உலகின் ஒவ்வொரு குடிமகனும் தமிழ்ப் புலிகள் (Tamil Tigers) என்று அழைக்கும் பெருமையைக் கொடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமேயாகும்.

பகிர்ந்துகொள்ள