ஒரே குடும்பத்தின் 5 பேருக்கு கொரோனா!

ஒரே குடும்பத்தின் 5 பேருக்கு கொரோனா!

சிலாபத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேசியா, இந்தோனேசியா சென்று வந்திருந்தவர் நேற்று கொரொனாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

வைரஸ் பாதித்த குடும்ப உறுப்பினர்களில் 4 மாத குழந்தை உள்ளது.

இதன் விளைவாக, இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் உடனடியாக வீட்டுத் தனிமைப்படுத்தல் குறித்து அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments