ஒரே நாளில் 7964 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ; 265 பேர் உயிரிழப்பு!

ஒரே நாளில் 7964 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ; 265 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 7,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 265 பேர் உயிரிழந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை 4980 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 116 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 682 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் ஆயிரத்து 105 பேர் உட்பட 17 ஆயிரத்து 386 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குஜராத்தில் 15 ஆயிரம் பேரும், ராஜஸ்தானில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments