ஒளிபாய்ச்சி கடலட்டை பிடித்த 29 பேர் வடமராட்சி கிழக்கில் கைது!

You are currently viewing ஒளிபாய்ச்சி கடலட்டை பிடித்த 29 பேர் வடமராட்சி கிழக்கில் கைது!

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் இரவு ஒன்பது மணியிலிருந்து கடற்படையினரால், அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்ட. 29பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த 11 படகுகள், உபகரணங்கள் என்பவற்றையும் கடற்படை கைப்பற்றியுள்ளனர்.

அண்மைய நாட்களாக வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில், குடாரப்பு, மாமுனை போன்ற இடங்களில் கடற்கரையில் வாடி அமைத்து கடலட்டை பிடித்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்பாணம் மன்னார் போன்ற பகுதிகளில் இருந்து வருத்தந்து தொழிலில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்த கடற்படை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திற்கு அதிகாரிகளிடம் அவர்களையும் அவர்களது படகுகள், உபகரணங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்தவர்களையும் அவர்களது கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments