ஒஸ்லோவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஒஸ்லோவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஒஸ்லோவில் உள்ள பிரின்ஸ்டாலில் (Prinsdal) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டார்!

நேற்று இரவு 23:51 மணிக்கு காவல்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
உயிர்காக்கும் அவசர முதலுதவி செய்யப்பட்டும், துப்பாக்கி சூட்டுக்கு ஆளானவரை காப்பாற்ற முடியவில்லை என்று ஒஸ்லோ காவல்துறையில் அவசரகால மேலாளர் Svein Arild Jørundland கூறினார்.

இறந்தவர் 21 வயது நிரம்பிய ஆண் என்பது குறிப்பிடத்தக்கது.

«Prinsdal Grill»க்கு வெளியே ஒரு நபர் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டதாக மக்களிடமிருந்து வந்த தகவலைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், இதன் பின்னணியில் அதே குற்றவாளி இருப்பதாகவும் தகவல்கல் கூறுகின்றன.

காவல்துறையினர் தடயங்களை உறுதிப்படுத்தும் செயல்பாட்டுடன் ஆயுதப்படைகளின் உதவியோடு குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
தகவல்: VG.no

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!