ஒஸ்லோவில் கத்திக்குத்து : இருவர் கைது!

You are currently viewing ஒஸ்லோவில் கத்திக்குத்து : இருவர் கைது!

இன்று சனிக்கிழமை 9.10 மணியளவில், ஒஸ்லோ ப்ரூகாத்தா (Brugata) பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார்.

தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் மேலும், குற்றவாளியாக கருதப்படும் நபர் ஒருவரிடமிருந்து ஒரு கத்தியும் காவல்துறையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளதாக காவல்துறைச் செயற்பாட்டு மேலாளர் க்ரோன் எங்கெசெத் (Krohn Engeseth) கூறியுள்ளார்.

தாக்கப்பட்ட நபரின் கையில் ஆழமாக வெட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர், சிகிச்சைக்காக அவசரசிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து சாட்சி விசாரைனைகளை நடத்தி வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள