ஒஸ்லோ நகரசபை : ஒஸ்லோவில் இலவச மிதிவண்டி பழுதுபார்ப்பு உறுதி!

ஒஸ்லோ நகரசபை : ஒஸ்லோவில்  இலவச மிதிவண்டி பழுதுபார்ப்பு உறுதி!

ஒஸ்லோவில் உள்ள போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சபையின் (Samferdsels- og miljøbyråd) செய்தித் தொடர்பாளர் Arild Hermstad (MDG) கூறுகையில், ஒஸ்லோவில் உள்ளவர்கள் இலவசமாக மிதிவண்டி பழுதுபார்ப்பு பெறுவதை நகர சபை உறுதி செய்யும் என்றார்.

பொது போக்குவரத்தின் போது அதிகமான ஒஸ்லோ மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒஸ்லோவிலுள்ள சில பட்டறைகள், நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்து இலவச மிதிவண்டி பழுதுபார்ப்பை வழங்கும் என்று Arild Hermstad மேலும் கூறியுள்ளார்.

வரி செலுத்துவோருக்கு இந்த நடவடிக்கை எப்படி அமையும், மேலும் இந்த நடவடிக்கை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

மிதிவண்டி இல்லாதவர்களுக்கு எந்த நடவடிக்கைகளையும் நகர சபை இதுவரை பரிசீலிக்கவில்லை. சிவப்பு-பச்சை நகர சபையின் குறிக்கோள் என்னவென்றால், 2025 இல் ஒஸ்லோவில் அனைத்து பயணங்களிலும் 25 விழுக்காடு மிதிவண்டி மூலமாகவே இருக்கவேண்டும் என்பதேயாகும்.
2019 ஆம் ஆண்டில் இது 7.3 விழுக்காடாக இருந்துள்ளது. (NT)

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments