ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது!

ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது!

துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துருக்கி நாட்டில் ஆகேயன் நகரில் இருந்து இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் 177 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் வந்திறங்கியது. அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அந்த விமானம் ஈரமாக இருந்த ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டே விலகிச்சென்று மோசமாக தரையை அடைத்ததால் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் விமானத்தின் உள்பாகங்கள் சேதமடைந்ததுடன், தீப்பிடித்துக் கொண்டது. உடனே அங்கு தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் வேகமாக தரை இறக்கப்பட்டனர் இதில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும், 52 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த