ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 1110 ஆக உயர்வு!

You are currently viewing ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 1110 ஆக உயர்வு!

இலங்கையில் கொவிட்-19 காரணமாக மரணித்த மேலும் 11 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கொவிட்-19 சடலங்கள் தொடர்ச்சியாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நேற்று (ஜூலை-24) மேலும் 11 கொவிட்-19 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 1110 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

நேற்று சிறீலங்காவில் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 26 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,044 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments