ஓமந்தையில் 7 அகவை சிறுவன் பலி!

ஓமந்தையில் 7 அகவை சிறுவன் பலி!

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரைக் காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (09) காலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அவர் அயல்வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் புத்தகப்பை வீட்டிற்கு அணமையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ப.அபிசக் என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது தாயார் வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையில் தந்தை மற்றும் அப்பம்மாவுடன் குறித்த சிறுவன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் தந்தையார் வீட்டில் இருக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள