ஓஸ்லோவில் மின்சார வாகனங்களுக்கான இரட்டிப்பு BOM கட்டணஉயர்வு ஒத்திவைப்பு!

ஓஸ்லோவில் மின்சார வாகனங்களுக்கான  இரட்டிப்பு  BOM  கட்டணஉயர்வு ஒத்திவைப்பு!

ஒஸ்லோபொதி 3 இன் மூன்றாம் படி, மார்ச் 1 இலிருந்து ஜூன் 1 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டண அதிகரிப்புடன் மூன்றாம் படி எப்போது செயல்படுத்தப்படும் என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை.

– படி 3 ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூன் 1 ஆம் திகதி செயல்படுத்தப்படாது என்று நோர்வே பொது சாலைகள் நிர்வாகத்தின் வலைத்தளமான Motor இல் ஒஸ்லோபொதி செயலகத்திலிருந்து “Kyrre Gran” உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூன் 1 ம் தேதி மின்சார வாகனங்களுக்கான கட்டண அதிகரிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தாமதத்திற்கு காரணம், OSLO நகராட்சி, Viken மாவட்டசபை மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை, மேலும் அரசியல்வாதிகளும் கட்டணங்களின் கூர்மையான அதிகரிப்பை ஏற்கவேண்டும் என்றும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (NTB)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments