ஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய கொரோனா தொற்றுக்கள்!

  • Post author:
You are currently viewing ஓஸ்லோ – கடந்த 24 மணிநேரத்தில் 102 புதிய கொரோனா தொற்றுக்கள்!

ஒஸ்லோ நகராட்சியின் இன்றைய புள்ளிவிவரங்கள், கடந்த 24 மணிநேரத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. இது முந்தைய நாளிலிருந்து சற்று அதிகரித்துள்ளதை காட்டுகின்றது.

கடந்த வாரத்தில், ஒஸ்லோவில் 422 தொற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிறுவனத்தின் வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 35 விழுக்காடு மக்கள் தனியார் வீடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 விழுக்காடு தொற்றுக்கள், நோய்த்தொற்றுக்கான அறியப்படாத வழியைக் கொண்டிருக்கின்றன . இது முந்தைய வாரத்திலிருந்து ஓரளவு குறைவாகும்.

பகிர்ந்துகொள்ள