கஜேந்திரகுமார் எம்பியின் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்ராலினிடம் தெரிவித்தார் தொல் திருமாவளவன்!

You are currently viewing கஜேந்திரகுமார் எம்பியின் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்ராலினிடம் தெரிவித்தார் தொல் திருமாவளவன்!
கஜேந்திரகுமார் எம்பியின் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்ராலினிடம் தெரிவித்தார் தொல் திருமாவளவன்.
ஈழத் தமிழர்களது சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த 15.11.2025 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து இலங்கையில் பெரும்பான்மையினச் சிங்கள பௌத்தர்களிடம் அதிகாரங்களை வழங்கியுள்ள ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு சமஸ்டி அரசியல் யாப்பு கொண்டுவருவதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழி ஏற்படுத்த இந்திய மத்திய அரசு அழுத்தங்களைப் பிரயோக்கிக்க வேண்டும்.
அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஊடாக அந்த அழுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
அதன் பிரகாரம் சென்னை திருமப்பிய பின்னர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்ராலின் அவர்களைச் சந்தித்து மேற்படி கோரிக்கையை அவரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
தொல் திருமாவளவன் அவர்களுடனான சந்திப்பு தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களது ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவன் மாகோசா விடுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply