கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம் !

You are currently viewing கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம் !

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி ,  தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவர்  பொ.ஐங்கரநேசன், ததேமமு செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ், உத்தியோகபூர்வ பேச்சாளர் , ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் இவ்வாறு செல்லவுள்ளனர்.

இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி கூறியுள்ளதாவது,

சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வளண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு  சிறிலங்கா  மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக  சிறிலங்கா  அரசு, ஐக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு  சிறிலங்கா  மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது.

இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply