கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட யாழை சேர்ந்த இளம் ஆசிரியர்!

You are currently viewing கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட யாழை சேர்ந்த இளம் ஆசிரியர்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மன்னார் பாடசாலை வாயிலில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் 54வது படையணி இராணுவ புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் பொலிசாரின் உதவியுடன் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான ஆசிரியரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

கைதாபோது , அவரது பையில் கேரள கஞ்சா மூன்று சிறிய பொட்டலங்களாக சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கஞ்சாவை மாணவர்களிற்கு விநியோகிக்க ஆசிரியர் கொண்டு வந்தாரா அல்லது வேறு நோக்கத்திற்காக கொண்டு வந்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகிர்ந்துகொள்ள