கஞ்சா கடத்திய இருவர் கைது!

கஞ்சா கடத்திய இருவர் கைது!

வடக்கு கடற்பரப்பில் 295 கிலோகிராம் பீடிகளுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில், கடற்படையினர் வழமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு தேடுதல் நடவடிக்கையை வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்டிருந்த வேளையில், சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று அவதானிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 06 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 295 கிலோகிராம் பீடி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33, 37 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள பீடி மற்றும் டிங்கி படகுடன் சந்தேகநபர்களை, மேலதிக நடவடிக்கைகளுக்காக சங்கானை கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments