கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

You are currently viewing கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா கோவில்குளம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட முற்றுகையின்போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 32 கிலோகிராம் 400 கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய கோவில்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வவுனியா சிறீலங்கா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply