கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்!!

கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு சிறீலங்கா இராணுவத்தினர்!!

வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வவுனியா புதிய சேலர் சின்னக்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு இராணுவத்தினர், இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பதிவின்போது, வாழ்வாதாரம் தரப்போகின்றோம் என இராணுவத்தினர் குடியிருப்பாளர்களிடம் தெரிவிப்பதாகவும் வீட்டில் வசிப்பவர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், வயது, தொலைபேசி இலக்கம் என்பன கோரப்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் இராணுவத்தினரால் இவ்வாறு தகவல் சேகரிக்கப்படு கின்றமை தொடர்பாக தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள