கடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை மனைவி முறைப்பாடு!

கடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை மனைவி முறைப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டம் இரணைப்பாலை பகுதியேச் சேர்ந்த மீனவர் ஒருவர் மற்றுமொரு மீனவருடன் கடலுக்கு சென்ற நிலையில் வீடுதிரும்பாது காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இரணைப்பாலையைச் சேர்ந்த லோ. பால்ராஜ் (வயது 35) என்பவர் செல்வா என்ற மாதகலைச் சேர்ந்த மற்றுமொரு மீனவருடன்(வயது 25) கடந்த 10 ஆம் திகதி கடலுக்கு சென்றுள்ளார்.


மூன்று நாட்களுக்கு கடலில் தங்கி நின்று தொழில் செய்துவிட்டு திரும்புவதாக கூறி சென்ற கணவர் இன்று வரையில் மீண்டும் திரும்பவில்லை என பால்ராஜின் மனைவியால் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திடம் கேட்டபோது குறித்த நபர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பிணையில் விடுதலையாகிய நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது
குறித்த நபர் எந்த கடற்தொழில்  சங்கத்திலும் பதிவுசெய்யப்படவில்லை கிராமத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments