கடற்றொழில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கடற்றொழில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடற்றொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நாச்சிக்குடா கடற்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் முழங்காவில் வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய M.யோகன் என்ற 3 மாத குழந்தையின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments