கடல் சீற்றம் காரணமாக பாலங்களில் மீன்பிடிக்கும் வீச்சுவலைத் தொழிலாளிகள்!

You are currently viewing கடல் சீற்றம் காரணமாக பாலங்களில் மீன்பிடிக்கும் வீச்சுவலைத் தொழிலாளிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைக்கு செல்லாத நிலையில் நிவர் புயல் தாக்கம் காரணமாக கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது.
இன்னிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியள்ளதால் நீர்வரத்தினால் வட்டுவாகல் ஆற்றின் மட்டம் உயர தொடங்கியுள்ளது இதனால் வீச்சு வலை தொழில் செய்யும் மீனவர்கள்  வட்டுவாகல் ஆற்றில் வீசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன்.
இரட்டைவாய்க்கால் பாலத்தின் ஊடாக நீர் பாய்வதால் நந்திக்கடலில் உள்ள மீன்கள் பாலம் ஊடாக சாலை கடல் நோக்கி செல்கின்றன வீச்சுவலை தொழிலாளர்கள் வலை வீசி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள