கடுமையான விதிகளுக்குள் முடங்கும் “Oslo”!

கடுமையான விதிகளுக்குள் முடங்கும் “Oslo”!

பிறழ்வடைந்த “கொரோனா” வைரசின் அதீதமான பரவலால், நோர்வே தலைநகர் “Oslo” உள்ளிட்ட சில இடங்களில் மிகக்கடுமையான விதிகள் இன்று, 23.01.2021 நண்பகல் 12:00 மணி முதல் அமுல் படுத்தப்படுகின்றன.

31.01.2021 வரை அமுலில் இருக்கக்கூடிய வகையில், “Oslo”, “Enebakk”, “Ås”, “Vestby”, “Nesodden”, “Indre Østfold”, “Våler” மற்றும் “Nordre Follo” ஆகிய இடங்களில் இவ்விதிகள் அமுலுக்கு வருகின்றன.

 1. இறுதிச்சடங்குகள் தவிர, பொது இடங்களில் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்படுகின்றன!
 2. அத்தியாவசிய பாவனைப்பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தகநிலையங்கள் அனைத்தும் மூடப்படும்!
 3. அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நிறுத்தப்படும்!
 4. உணவகங்கள் (உணவை முன்பதிவு செய்து எடுத்துச்செல்ல அனுமதியுண்டு), உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், நூலகங்கள், பொழுதுபோக்ககங்கள், நூதனசாலைகள், திரையரங்கங்கள் உள்ளிட்ட, பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்படும்!
 5. குழந்தைகள் காப்பகங்கள், இளநிலை பாடசாலைகள் சிவப்பு அபாய நிலையில் வைத்திருக்கப்படும்!
 6. மேனிலை / உயர்நிலைப்பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் இலத்திரனியல் கற்பித்தல் முறை பின்பற்றப்படும்!
 7. நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு அநாவசியமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும்!
 8. பொதுப்போக்குவரத்து 50 சதவிகிதமாக மட்டுப்படுத்தப்படும்!
 9. முகக்கவசம் அணிவது கட்டாயம்!
 10. நலிந்த உடல் நிலையை கொண்டோர் / குறைவான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டோர் கூடுமானவரை தனிமையில் இருக்க வேண்டும்!

உள்ளிட்ட விதிகள் இன்றிலிருந்து அமுலாகின்றன.

இவை தவிரவும், ஏற்கெனவே அமுலில் இருக்கும் விதிமுறைகளும் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments