கடுமையான தொற்றிலிருந்து மீண்ட கிருஸ்டினா!

You are currently viewing கடுமையான தொற்றிலிருந்து மீண்ட கிருஸ்டினா!

நான் வீட்டில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது எனக்குள் இருக்கும் வைரஸ்களை வீட்டில் இருந்தவாறே என்னால் சமாளிக்க முடியும் ‘என்று VG பத்திரிகைக்கு தொலைபேசியில் சொல்லியிருக்கின்றார் 52 அகவையுடைய Christine Koht

இதனால் கோத் அவர்கள் ஆரோக்கியமானவர் என்று அர்த்தமல்ல. அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக்குழாய் தொற்று காரணமாக 15 மாதங்கள் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருக்கின்றார் மேலும் கார்டிசோன் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிக அளவில் உள்ளன. இதேவேளை நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக உள்ளது.

கற்பனை செய்து பாருங்கள் இப்போது நான் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து நோயோடு போராடிக்கொண்டிருக்கின்றேன். வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கழித்து கொரோனா வருகிறது கொரோனா தொற்றை நினைத்தால் மரணபயமாக இருக்கிறது என்னைப் பொறுத்தவரை இது மரணத்திற்கு ஒப்பானது என Christine Koht தெரிவித்துள்ளார்.

மோசமான உடல்நலம் உள்ளவர்கள் இறப்பதைத் தடுக்க நாடு முழுவதும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக Christine Koht (52) தெரிவித்துள்ளதோடு நோயிலிருந்து தன்னை காப்பாற்றிய நோர்வேக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள