கடுமையான வழிமுறைகள் பல மாதங்கள் தொடரலாம்: FHI

  • Post author:
You are currently viewing கடுமையான வழிமுறைகள் பல மாதங்கள் தொடரலாம்: FHI

கொரோனா தொற்றுநோயைத் தடுப்பது இலகுவானதல்ல என்று நம்புவதாக பொது சுகாதார நிறுவனம்(FHI) கூறியுள்ளது. வரவிருக்கும் பல மாதங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.

நோய்த்தொற்றுக்கான வலுவான தீர்வுகள் படிப்படியாக வெளியிடப்படுவதற்கு சில மாதங்களுக்கு எடுக்கும் என்று FHI கருதுவதாக நோய்த்தொற்று கட்டுப்பாட்டின் (Smittevern) பகுதி இயக்குனர் Geir Bukholm கூறியுள்ளார்.

தொற்றுநோயைத் தடுக்க முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது, தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களைச் சோதிப்பது போன்ற நடவடிக்கைகள் இனி பயனுள்ளதாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Forskning.no

பகிர்ந்துகொள்ள