கடும் வெப்பத்தால் ஸ்பெயினில் 1,028 பேர் மரணம்!

You are currently viewing கடும் வெப்பத்தால் ஸ்பெயினில்  1,028 பேர் மரணம்!

ஐரோப்பா முழுவதும் தொடரும் வெப்ப அலையால், ஜூன் மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் ஜூன் மாதத்தில் மட்டும் 1,028 பேர் உயிரிழந்துள்ளனர்.இது, 2017 ஜூன் மாதத்தில் பதிவான 1,000 மரணங்களின் எண்ணிக்கையையும் மிஞ்சியுள்ளது.

1961-ல் நாடு வானிலை தரவுகளைப் பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து, ஸ்பெயினில் இது இரண்டாவது வெப்பமான ஜூன் மாதம் என்று ஸ்பானிய வானிலை ஆய்வு மையம் (AEMET) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வெப்பமான வானிலையால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 65 வயதுக்கு மேற்பட்ட 1,022 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 85 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களிடையே 720 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில், இதன் காரணமாக 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவரின் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply