கடையை தீக்கிரையாக்கியவர் ரயில் முன் பாய்ந்தார்!

கடையை தீக்கிரையாக்கியவர் ரயில் முன் பாய்ந்தார்!

பருத்தித்துறை பகுதியில் கடை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், ரயில் முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளார். பருத்தித்துறை பன்னங்கட்டி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரேரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சந்தை கட்டட தொகுதியில் பான்சி கடையுடன் இணைந்த புடவை கடை ஒன்று நேற்று அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் , அருகில் இருந்த கடையின் சிசிரிவி கமரா பதிவுகளை சோதனை செய்தனர்.

இதன்போது, எரிக்கப்பட்ட கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடை உரிமையாளரே கடைக்கு தீ மூட்டி சென்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சந்தேக நபரை கைது செய்யும் நோக்குடன் நேற்று அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் தலைமறைவாகி இருந்தார்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்திய நிலையில், சந்தேக நபர் இன்று காலை. 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!