கனடாவில் 2500 ஐ எட்டும் கொரோனா உயிரிழப்பு!

கனடாவில் 2500 ஐ எட்டும் கொரோனா உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2500 ஐ நெருங்கியுள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

கனடாவில் இதுவரை, 2,464 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 45,318 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை ஒன்ராறியோவில் புதிதாக 476 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு 13,995 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கில் நேற்று 100 பேர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு உயிரிழப்பு 1500ஐ நெருங்கியுள்ளது. இங்கு 23,267 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள